ADDED : டிச 14, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே சிங்கப்புலியாம்பட்டி, வெள்ளையாபுரம் கிராமங்களுக்கு நடுவில் உள்ள ஊருணி நிரம்பி வருவதால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட ஊருணி, கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சிங்கப்புலியாம்பட்டி, வெள்ளையாபுரம் கிராமத்திற்கு நடுவில் உள்ள ஊருணியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிரம்பி வருகிறது.
தண்ணீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமுதி பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த் துறையினர் ஊருணி தண்ணீரை வெளியேற்றுவதற்காக கால்வாய், சிறிய குழாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

