/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீணாகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
/
வீணாகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வீணாகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வீணாகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2025 05:23 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் பகுதியில் நெற்பயிர்கள் வீணாகியதை அடுத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லாததால் நிவாரணம் வழங்க கோரி தாசில்தார் சடையாண்டியிடம் மனு கொடுத்தனர்.
இளஞ்செம்பூர் கிராமத்தில் 2000 ஏக்கரில் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்தனர். போதிய பருவமழை இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி தடைபட்டது. ஆழ்குழாய் உள்ளிட்ட தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். தற்போது பருவமழை பொய்ப்பு மற்றும் நோய் தாக்குதலால் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் வளர்ச்சி தடை பட்டு முழுவதும் வீணாகியது.
இதனை அடுத்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியும், தனிநபரிடம் கடன் வாங்கியும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்தும் தற்போது பயிர்கள் வீணாகியதால் எந்தவித பயனும் இல்லை. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நிவாரணம் உள்ளிட்ட பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என முதுகுளத்துார் தாசில்தார் சடையாண்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பயிர்காப்பீடு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

