/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேந்தனேந்தலில் படகு சவாரி துவக்க வலியுறுத்தல்
/
சேந்தனேந்தலில் படகு சவாரி துவக்க வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 11:53 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே எழில் மிகு சேந்தனேந்தல் ஓடையில் படகு சவாரி துவக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூரில் இருந்து தொண்டி செல்லும் ரோட்டில் சேந்தனேந்தல் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் அதிகளவில் அலையாத்தி காடுகள் உள்ளதாலும், அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ள பல்வேறு பறவைகளால் அப்பகுதி எழில் மிகுந்ததாக அமைந்துள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளை இந்த ஓடை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் அலையாத்தி காடுகள் சூழ்ந்த இந்த ஓடையில் சிறிய படகு சவாரி துவங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஓடை வழியாக சென்று அலையாத்தி காடுகள் மற்றும் அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ள செங்கால் நாரைகள், கொக்குகள், வெளிநாட்டு பறவைகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்கலாம்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேந்தனேந்தல் ஓடையில் படகு சவாரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.