/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
/
எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2025 06:41 AM
தொண்டி: எஸ்.பி.பட்டினத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், ஓரியூர், கலியநகரி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் சீரானதாக இல்லை. இதனால் அடிக்கடி மின் குறைவழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
எஸ்.பி.பட்டினம் முன்னாள் ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் கூறுகையில், மூன்றாண்டுகளுக்கு முன்பு எஸ்.பி.பட்டினத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.