/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தல்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தல்
கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தல்
கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 20, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பெரியபட்டினம் தெற்கு புதுக்குடிருப்பை சேர்ந்த பாண்டியராஜ் மனைவி இந்திராதேவி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெரியபட்டினத்தில் வீடுகட்டுவதற்காக விண்ணப்பம் செய்தோம். வீடுகட்டுவதற்குரிய அனுமதி கிடைத்துள்ளது, மேலும் கட்டடப்பணி துவங்கும்படி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து எனது சொந்த செலவில் தரைத் தளம் அமைத்தோம். இதுவரை கனவு இல்லம் திட்டத்தில் தொகை வழங்கவில்லை. எனவே உடனடியாக வீட்டின் அனுமதி கடிதம், இதுவரை செலவு செய்த தொகையை வழங்கிட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.