/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிங்கனேந்தல் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்
/
சிங்கனேந்தல் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்
சிங்கனேந்தல் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்
சிங்கனேந்தல் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 11:36 PM
தேவிபட்டினம்:சிங்கனேந்தல் மேம்பாலம் பகுதியில் தொடரும் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் பாலம் அமைந்துள்ளது. தரைமட்ட பாலமாக இருந்த இந்த பாலம், ரோடு விரிவாக்கத்தின் போது உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வரும் நிலையில் பாலத்தின் முன் பகுதி ரோடு, குறுகிய வாய்க்கால் அளவில் தாழ்வாக உள்ளது.
இதனால் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வேகமாக செல்லும் வாகனங்கள், ரோட்டில் தாழ்வான பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் பாலத்தின் முன்புறமுள்ள சோல்டிங் காரணமாக தொடர் விபத்துக்கள் நடக்கிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.