/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் மண் அரிப்பை தடுக்க வலியுறுத்தல்
/
ரோட்டில் மண் அரிப்பை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2025 11:18 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பிச்சனார் கோட்டை, அரியான் கோட்டை வழியாக ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரையை ஒட்டியவாறு பரமக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் பல்வேறு கிராமத்தினர் பயனடைவதுடன் அதிக வாகன போக்குவரத்து உள்ள ரோடாகவும் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் மழைக்காலத்தில் பெரிய கண்மாய் கரையில் இருந்து ஏற்படும் மண்ணரிப்பால் பெரும்பாலான பகுதிகளில் ரோடு சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்ணரிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

