ADDED : செப் 12, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
ராமநாதபுரத்தில் நாளுக்குநாள் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான புகாரையடுத்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர்(பொ) குமரன் உத்தரவில் நகராட்சி சுகாதாரப்பணியாளர்கள், கால்நடை மருத்துவப்பணியாளர்கள் இணைந்து நகரில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து ரேபிஸ் வெளிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
––
