/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர்
/
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர்
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர்
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர்
ADDED : நவ 02, 2025 04:08 AM

ஆற்றை முறைப்படுத்த கோரிக்கை
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட பங்கீட்டு வைகை அணை நீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் பரமக்குடியை கடந்து சென்றது. தொடர்ந்து ஆற்றை முறைப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வைகை பூர்வீக பாசனப்பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 என்ற விகிதத்தில் திறக்க வேண்டும். இந்நிலையில் கடந்த வாரம் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே ராமநாதபுரம் சென்றடைந்தது. தொடர்ந்து அக்.,31ல் துவங்கி ராமநாதபுரம் மாவட்ட வைகை பங்கீட்டு நீர் 5 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் பார்த்திபனுார் மதகு அணை வழியாக நேற்று முன்தினம் காலை திறக்கப்பட்ட நிலையில் மதியம் பரமக்குடியை கடந்து சென்றது. ஆனால் வைகை ஆற்றின் தடம் முழுவதும் மறைந்து நாணல், சீமைக்கருவேல மரங்கள் அதிகரித்துள்ளது. மேலும் பரமக்குடியில் ஆற்றுப்பாலம் அருகில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்துள்ள நிலையில், தண்ணீரின் போக்கு ஒரே நேர்கோட்டில் செல்கிறது. இதனால் வைகை ஆறு முழுவதும் தண்ணீர் செல்லாமல் குறிப்பிட்ட பகுதியில் செல்வதால் நீரூற்று முறையாக இல்லாமல் சிக்கல் உண்டாகிறது.
பரமக்குடி உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஆற்றின் போக்கை முறைப்படுத்த பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

