/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவுநீர், கட்டுமான பொருட்களால் வைகை மாசு; ஆற்றை பாதுகாத்திட விவசாயிகள் வலியுறுத்தல்
/
கழிவுநீர், கட்டுமான பொருட்களால் வைகை மாசு; ஆற்றை பாதுகாத்திட விவசாயிகள் வலியுறுத்தல்
கழிவுநீர், கட்டுமான பொருட்களால் வைகை மாசு; ஆற்றை பாதுகாத்திட விவசாயிகள் வலியுறுத்தல்
கழிவுநீர், கட்டுமான பொருட்களால் வைகை மாசு; ஆற்றை பாதுகாத்திட விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2025 10:21 PM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம், விவசாய பாசனத்தின் ஆதாரமாக உள்ள வைகை ஆற்றின் வறண்ட நீர்பிடிப்பு பகுதியில் கட்டுமான கற்கள், மணல்களை கொட்டி அள்ளும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் தண்ணீர் செல்லும் காலங்களில் நீர் ஊற்றுக்கு சிக்கல் உண்டாகிறது. கழிவுநீர் கலப்பு, கட்டுபொருட்கள் கொட்டுவதை தடுத்து ஆற்றை துாய்மைபடுத்திட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி வருஷ நாட்டில் துவங்கி மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக வைகை ஆறு ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேருகிறது. வற்றாத ஜீவ நதியாக இருந்த வைகை ஆற்றில் புனிதத்தை காக்கும் வகையில், ஒவ்வொரு பகுதிகளும் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.
இந்நிலையில் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் மூலம் செல்லும் தண்ணீர் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும்படி செய்துள்ளனர். ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பல லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறும் சூழல் உள்ளது.
இவை அனைத்தும் வாறுகால்கள் வழியாக வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் செடி, கொடிகள், சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன.
இச்சூழலில் கட்டாந்தரையாகிய வைகை ஆற்றில் கட்டுமான நிறுவனத்தினர் வீடு இடித்த கழிவுகள் மற்றும் கட்டுமான கற்கள், மணல்களை கொட்டி அள்ளும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இவற்றால் ஆற்றின் மணல் வெளி மேலும் கடினத்தன்மையாகி தண்ணீர் செல்லும் காலங்களில் நீர் ஊற்றுக்கு சிக்கல் உண்டாகிறது.
இச்சூழல் அனைத்து வைகை ஆறு படித்துறைகளிலும் நிலவுவதால் டிராக்டர் தொடங்கி கனரக வாகனங்கள் ஆற்றில் இறங்கும்படி உள்ளது. இதனால் விபத்து அச்சமும் அதிகரித்துள்ளது.
ஆகவே வைகை ஆற்றை காக்கும் நோக்கில் படித்துறைகளில் வாகனங்கள் செல்லாத வகையில், தடுப்புகளை அமைக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுத்திட பொதுப்பணித்துறை(நீர்வளம்), வருவாய், நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

