/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்
/
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்
ADDED : நவ 24, 2025 06:27 AM

தொண்டி: தொண்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிலைமானில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களிடத்தில் டியூசன் படித்தனர். நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 21 பேர் தனியார் சுற்றுலா வேனில் வேளாங் கன்னிக்கு சென்றனர்.
அங்கிருந்து தொண்டி வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் வேன் சென்றது.
நேற்று மதியம் 2:00 மணிக்கு தொண்டி வட்டாணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் மாணவன் சுகைதீன் 13, உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். அப்பகுதி வழியாக சென்றவர்கள் வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி மருத்துமனையில் அனுமதிக்க பட்டனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

