/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
/
காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
ADDED : நவ 24, 2025 06:15 AM

கமுதி: -கமுதி ஆனையூர் விலக்கு அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் குடிநீர் நீரேற்று நிலையத்தி லிருந்து ரோட்டோரத்தில் குழாய் அமைக்கப்பட்டு கருங்குளம், பேரையூர், பாக்குவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
கமுதி ஆனையூர் விலக்கு அருகே முதுகுளத்துார் ரோட்டோரத்தில் கடந்த சில நாட்களாகவே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
பேரையூரிலிருந்து கமுதி செல்லும் ரோட்டில் பல இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது தொடர் கதையாகவே உள்ளது.
கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.