ADDED : நவ 24, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் அன்னைநகரில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பிற்கு செல்லும் ரோடு மழையால் நடக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.
இது குறித்து திருவெற்றியூர் கவாஸ்கர் கூறியதாவது- இக் குடியிருப்பிற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் ரோடு போடப்பட்டது. நாளடைவில் ரோடு சிதைந்தது. தற்போது பெய்து வரும் மழையில் நடக்க முடியாத அளவிற்கு சகதியாக மாறிவிட்டது. டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

