ADDED : நவ 16, 2025 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே கேட் மீது தேவகோட்டையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சுற்றுலா பயணிகள் வேன் நேற்று காலை 10:00 மணியளவில் மோதியது.
இதில் ரயில்வே கேட் முழுதும் சேதம் அடைந்ததால் ராமநாதபுரம் --ராமேஸ்வரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அந்த வழியாகச் செல்லும் நிலையில் ராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மதியம் 12:00 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட்டை சீரமைத்த பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

