ADDED : ஆக 22, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே நத்தக்கோட்டை அழகண்ட அம்மாள், காத்தாயி அம்மன், கருப்பண சுவாமி ஆலய மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மூலவர்களுக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடந்த தீபாராதனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
