கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதம்: கேள்விகுறியான பாதுகாப்பு
கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதம்: கேள்விகுறியான பாதுகாப்பு
UPDATED : அக் 18, 2026 04:29 PM
ADDED : அக் 18, 2026 04:25 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. சமூக விரோதிகளால் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது.
முதுகுளத்துார் கால்நடை மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கால்நடை மருத்துவமனை சுற்றி சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளியாக இருப்பதால் சிலர் மது அருந்தியும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க சுற்றுச்சுவர் இருந்த இடத்தில் சிமை கருவேலம் மரத்தால் வேலி அமைத்துள்ளனர். எனவே கால்நடை மருத்துவமனை வளாகத்தை சுற்றி புதிதாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
