/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் அபாயம் கால்நடை ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
/
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் அபாயம் கால்நடை ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் அபாயம் கால்நடை ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் அபாயம் கால்நடை ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
ADDED : செப் 18, 2025 05:20 AM
ராமநாதபுரம் : பருவமழை, குளிர்காலங்களில் ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி செலுத்துமாறு கால்நடை பயிற்சி, ஆராய்ச்சி துறை தலைவர் விஜயலிங்கம் தெரிவித்தார்.
ஆடுகளுக்கு பொதுவாக கலப்பு தீவனங்கள் வழங்குவதை விட புல்வெளியில் மேய்ச்சலுக்கு விடுவது போதுமானது. ஆடுகளின் உதடு அமைப்பு சிறு புற்களைக் கூட மேய்வதற்கு ஏதுவாக இருப்பதால் வறட்சி காலங்களில் தரையோடு ஒட்டியுள்ள புற்களை உண்ண முடியும்.அதுவே மழைக்காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.
சமீப காலமாக பெய்த மழையால் ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் பரவி வருகிறது.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தலைவர் விஜயலிங்கம்கூறியதாவது:
மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலத்தில் புற்கள் நன்கு பரவி காணப்படும். இந்த நேரத்தில் ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது இளம்புல்லை விரும்பி உண்ணும். இந்த புல்லில் அதிகப்படியான சத்துக்கள் இருப்பதால் ஆடுகளின் வளர்ச்சிக்கு உதவும். அதே நேரத்தில் இளம் ஆடுகள் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும்.
அதிகம் உண்ணும் ஆடுகளுக்கு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருகி நச்சுப்பொருளை உண்டாக்கும். அவை குடற்பகுதியில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலந்து ரத்தக்குழாய், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
இதனால் ஆட்டின் கழுத்து வளைந்து கால்கள் பின்னி துள்ளி விழுந்து இறக்க நேரிடும்.
இந்த நோய் வராமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சத்து குறைவான உணவுகளை மட்டும் உண்ண கொடுக்க வேண்டும் என்றார்.