/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துணை ஜனாதிபதி இன்று வருகை: ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை; 1500 போலீசார் பாதுகாப்பு
/
துணை ஜனாதிபதி இன்று வருகை: ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை; 1500 போலீசார் பாதுகாப்பு
துணை ஜனாதிபதி இன்று வருகை: ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை; 1500 போலீசார் பாதுகாப்பு
துணை ஜனாதிபதி இன்று வருகை: ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை; 1500 போலீசார் பாதுகாப்பு
UPDATED : டிச 30, 2025 12:37 PM
ADDED : டிச 30, 2025 05:31 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.30ல்)ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கவுள்ள காசி தமிழ் சங்கமம் நிறைவுவிழா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மதியம் 3:00மணிக்கு வந்திறங்கி, பின் காரில் ராமேஸ்வரம் வர உள்ளார்.
பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் நேற்றும் (டிச.,29,30) இன்றும் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதைமீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மதியத்திற்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் - -மண்டபம் இடையே போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் தெளிவான அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

