UPDATED : நவ 21, 2026 06:50 PM
ADDED : நவ 21, 2026 06:50 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே வெளிப்பட்டிணம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த முகமது கோயா மகன் நாகூர்கனி 36. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கையில் அரிவாள் வைத்து மிரட்டுவது போன்றும், துப்பாக்கி பயன்படுத்துவது போன்று எடிட் செய்தும் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். மேலும் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த டூவீலர் திருட்டிலும் நாகூர்கனிக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இரு வழக்குகளிலும் கேணிக்கரை போலீசார் நாகூர்கனியை கைது செய்தனர்.
