/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராஜாக்கள்பாளையத்திற்கு ஒரு மாதமாக பஸ் வரவில்லை கிராம மக்கள் சிரமம்
/
ராஜாக்கள்பாளையத்திற்கு ஒரு மாதமாக பஸ் வரவில்லை கிராம மக்கள் சிரமம்
ராஜாக்கள்பாளையத்திற்கு ஒரு மாதமாக பஸ் வரவில்லை கிராம மக்கள் சிரமம்
ராஜாக்கள்பாளையத்திற்கு ஒரு மாதமாக பஸ் வரவில்லை கிராம மக்கள் சிரமம்
ADDED : நவ 22, 2025 02:40 AM
சிக்கல்: சிக்கல் அருகே ராஜாக்கள்பாளையத்திற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு டவுன் பஸ் வராததால் சுற்றுவட்டார கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை, ஏர்வாடி வழியாக சிக்கல், மதீனா நகர், ராஜாக்கள் பாளையம் வரக்கூடிய அரசு டவுன் பஸ் சாலை சேதமடைந்த காரணத்தால் ஒரு மாதமாக பஸ் வரத்தின்றி உள்ளது. ராஜாக்கள் பாளையம் கிராம தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:
சிக்கலில் இருந்து ராஜாக்கள்பாளையம் செல்லக்கூடிய 3 கி.மீ.,க்கு சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பக்கவாட்டில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் பஸ் இயக்கினால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
எனவே மண் அரிப்பை சரி செய்து தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். டவுன் பஸ் வராததால் பள்ளி கல்லுாரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். வாடகை வாகனங்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க வேண்டும். அடிக்கடி மின் பழுது ஏற்படுகிறது.
கூடுதல் டிரான்ஸ்பார்மர் வேண்டும். உள்ளிட்டவைகளை நிவர்த்தி செய்யக்கோரி தொகுதி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மனு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

