/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உய்ய வந்த அம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
/
உய்ய வந்த அம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED : நவ 22, 2025 02:40 AM
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் உய்ய வந்த அம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா வாங்கியது.
இன்று காலை இரண்டாம் காலை பூஜை, மருந்து சாத்துதல், மூன்றாம் கால பூஜை துவங்குகிறது. இரவு பக்தி தெம்மாங்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (நவ., 23) காலை 9:30 மணிக்கு உய்ய வந்த அம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு மூன்று நாட்களும் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் உய்ய வந்த அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

