/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண் கொலையில் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்
/
பெண் கொலையில் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்
பெண் கொலையில் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்
பெண் கொலையில் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்
ADDED : நவ 09, 2024 05:57 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கழுத்தை நெரித்துக்கொலை செய்த வழக்கில் உச்சிப்புளி போலீசார் விசாரணையில் திருப்தி இல்லாததால் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
உச்சிப்புளி அருகே நாரையூரணி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி 55, நவ.5 ல் தலையில் கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை திருடிச் சென்றனர். உச்சிப்புளி போலீசார் நாகாச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் மாரிஸ்குமாரை 36, கைது செய்தனர்.
மாரிஸ்குமார் லட்சுமி மகள் பிரியாவை திருமணம் செய்து வைக்குமாறு லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று பிரியாவை திருமணம் செய்து வைக்க லட்சுமியிடம் கேட்ட போது மறுத்ததால் லட்சுமியை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் மாரிஸ்குமார் கைரேகை பதிவு இல்லை. ஒருவர் மட்டுமே இந்த கொலையை செய்திருக்க முடியாது. சரியான விசாரணை நடத்தப்படவில்லை என நாரையூரணி மக்கள் போராட்டம் நடத்தினர். 4 நாட்கள் போலீசார் அவகாசம் கேட்டனர்.
நேற்று வரை இந்த வழக்கில் மாற்றம் இல்லாததால் கிராம மக்கள் உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மக்கள் சந்தீஷ் எஸ்.பி.,யை சந்தித்து புகார் அளித்துள்ளனர். லட்சுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.