/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ADDED : டிச 15, 2024 08:56 AM
சாயல்குடி : சாயல்குடி அருகே மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அலுவலர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சாயல்குடி அருகே வி.சேதுராஜபுரம் உச்சிநத்தம் சாலை, எஸ்.தரைக்குடி கொண்டு நல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி சாலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. 2000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி முதல் கொண்டு நல்லான்பட்டி, செவல்பட்டி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி மக்கள் சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அவர்களை சூழ்ந்த கிராம மக்கள் இரண்டு நாட்களாக எவ்வித உதவியும் இன்றி தவிக்கிறோம். அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என முற்றுகையிட்டு தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.