/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விழுப்புரம் - ராமேஸ்வரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்கிறது
/
விழுப்புரம் - ராமேஸ்வரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்கிறது
விழுப்புரம் - ராமேஸ்வரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்கிறது
விழுப்புரம் - ராமேஸ்வரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்கிறது
ADDED : ஜூன் 18, 2025 11:36 PM
தினமலர் செய்தி எதிரொலி
பரமக்குடி: ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரம் இரு மார்க்கத்தில் செல்லும் ரயில்கள், தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடியில் நின்று செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் அதிக வருமானம் தரும் ஸ்டேஷனாக இருக்கிறது. இங்கு பல்வேறு தொலை துார ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வருகிறது.
இந்நிலையில் ஜூன் 21, 22 மற்றும் 28, 29 ஆகிய நாட்களில் விழுப்புரம் --ராமேஸ்வரம் - -விழுப்புரம் அதிவிரைவு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விழுப்புரத்தில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலம், பெண்ணாடம், அரியலுார், திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக காலை 11:40க்கு ராமேஸ்வரம் செல்கிறது.
இதே போல் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு இரவு 10:35 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் பரமக்குடியில் காலை 10:13 -- 10:15 வரை 2 நிமிடங்களும், மறு மார்க்கத்தில் மதியம் 3:45 -3:47 என 2 நிமிடங்களும் நின்று செல்லும்.
பகல் நேர ரயில் என்பதால் 2 முன்பதிவில்லா பெட்டிகள் 11 இருக்கை வசதி கொண்ட முன்பதிவு மற்றும் ஒரு ஏ.சி., இருக்கை வசதி உள்ளது. மேலும் 2 எஸ்.எல்.ஆர்.டி., பெட்டிகள் என 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுகள் நடக்கும் நிலையில் இந்த ரயிலை வாரம் முழுவதும் நீட்டித்து அறிவிப்பதுடன், பரமக்குடி ஸ்டேஷனில் நிரந்தரமாக நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.