/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் வைரஸ் காய்ச்சல்
/
கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் வைரஸ் காய்ச்சல்
கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் வைரஸ் காய்ச்சல்
கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் வைரஸ் காய்ச்சல்
ADDED : நவ 11, 2025 11:33 PM
சாயல்குடி: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் கிராமங்களில் தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
இதனுடன் வீடுகளின் கழிவு நீர் ரோட்டில் செல்வதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எம்.ஆர்.பட்டினம் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
கடலாடி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சாயல்குடி, கடலாடி அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். காய்ச்சல் பாதிப்பால் வேலைக்குச் செல்ல இயலாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் காய்ச்சல் பாதித்த கிராமங்களை கண்டறிந்து உரிய முறையில் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் என்றார்.