ADDED : செப் 07, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 154ஆவது பிறந்தநாள் விழா சாயல்குடியில் கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
சாயல்குடி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் முனியசாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் செல்லப்பா, உட்பட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.