ADDED : நவ 20, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் நேற்று கீழக்கரையில் அனுசரிக்கப்பட்டது.
சுதேசி இளைஞர் பேரவை மகாலிங்கம், அசோக்குமார், ஜஸ்வந்த், கவிதாஸ், கருப்பு ராஜா, பழனி முருகன் உட்பட பலர் பங்கேற்று வ.உ.சி.யின் உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட காலத்தில் வ.உ.சி,யின் தியாகங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

