தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாக்காளர்கள் விழிப்புணர்வு  ஊர்வலம் 

வாக்காளர்கள் விழிப்புணர்வு  ஊர்வலம் 

வாக்காளர்கள் விழிப்புணர்வு  ஊர்வலம் 


ADDED : மார் 21, 2024 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுதல், டூவீலர் ஊர்வலம் நடந்தது.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஒட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் மூலம் டூவீலர் ஊர்வலத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: வாக்காளர்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடக்கிறது என்றார்.

உதவி கலெக்டர் பயிற்சி சிவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us