நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முன்பு நடந்த ஊர்வலத்தை தாசில்தார் அமர்நாத் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தேர்தல் துணை தாசில்தார் இந்திரஜித், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மணிமேகலை மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

