/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்ப்பில் ஈடுபட்ட வாக்காளர்கள்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்ப்பில் ஈடுபட்ட வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்ப்பில் ஈடுபட்ட வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்ப்பில் ஈடுபட்ட வாக்காளர்கள்
ADDED : டிச 21, 2025 06:27 AM
திருவாடானை: வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிவடைந்து பட்டியல் வெளியிடப்பட்டதால் வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்ற சரிபார்ப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டனர். திருவாடானை சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நவ.,4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம் வினியோகித்தனர். பொது மக்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணி நிறைவடைந்து, தாசில்தார் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் இணையதளத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர்.,க்கு பின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. திருவாடானை சட்டசபை தொகுதியில் அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் நேற்று பரபரப்பாக காணப் பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் சென்று பலரும் தங்களின் பெயரை உறுதிப்படுத்திக் கொண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பகுதி பி.எல்.ஓ.,க்களிடம் அலைபேசியில் பேசி ஏன் எங்களது பெயர் விடுபட்டது என்று கேட்டனர்.

