ADDED : டிச 21, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் இரவிலும், காலையிலும் பனி மூட்டம் நிலவுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலும், காலை 8:00 மணி வரையிலும், பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி, வீடுகளில் முடங்கியுள்ளனர்.

