/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டுவசதி வாரியத்தில் தாமத தவணை தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி
/
வீட்டுவசதி வாரியத்தில் தாமத தவணை தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி
வீட்டுவசதி வாரியத்தில் தாமத தவணை தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி
வீட்டுவசதி வாரியத்தில் தாமத தவணை தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி
ADDED : ஆக 09, 2025 01:56 AM
ராமநாதபுரம்,:வீட்டு வசதி வாரியத்தில் தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டுக்கு 5 மாதத்துக்கு உண்டான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை செயல்படுத்தப் படுகிறது.
இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வாரியத்தால் வீடு, மனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 2025 மார்ச் 31 வரை விற்பனை பத்திரம் பெறாமல் 14 ஆயிரத்து 126 பேர் உள்ளனர். இதில் மாத தவணை முடிந்து வட்டி சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் 8204 பேர் உள்ளனர்.
இந்த தள்ளுபடி திட்டத்தை பயன்படுத்தி எல்லா ஒதுக்கீட்டுதாரர்களும் விற்பனைப் பத்திரம் பெறுவதன் மூலம் ரூ.164.56 கோடி வாரியத்துக்கு வருவாயும், ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ.50.60 கோடி வட்டி தள்ளுபடியும் கிடைக்கும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.