/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர் நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் அவசியம்
/
நீர் நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் அவசியம்
ADDED : அக் 31, 2025 11:48 PM
திருவாடானை: பருவமழை துவங்கியதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நீர் நிலைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பருவமழை துவங்கியதால் திருவாடானை, தொண்டி பகுதியில் மழை பெய்து வருகிறது. விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமியர் பொழுது போக்க நீர் நிலைகளை தேடி செல்வர். திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழை நீர் விவசாயத்திற்கு குறைந்த அளவு நீர் தேவைப்பட்டதால் பெரும்பாலான கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளது. அதே போல் ஊருணிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இங்கு குளிக்கவும், நீச்சல் பழகவும் சிறுவர்கள் வந்து விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர். தற்போது பருவமழை துவங்கியதால் கண்மாய், ஊருணிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. எனவே நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்.
தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

