ADDED : செப் 26, 2024 03:15 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் நகர் போலீஸ் ஸ்டேஷனில் 2016ல் எஸ்.ஐ.,யாக தங்க முனியசாமி பணிபுரிந்த போது கர்நாடக மாநில வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து ராமேஸ்வரம் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தங்கமுனியசாமி விசாரித்தார்.
இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு பல முறை விசாரணைக்கு வந்த போது தங்கமுனியசாமி ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தும், அவரை அக்.,14ல் ஆஜர்படுத்தவும் நீதிபதி குருரகுரு உத்தரவிட்டார். தங்கமுனியசாமி தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

