/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சாலையில் கழிவு நீர்: மக்கள் அவதி
/
ராமநாதபுரம் சாலையில் கழிவு நீர்: மக்கள் அவதி
ADDED : ஏப் 15, 2025 05:47 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சாலை தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரை கையாள்வதில் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாண்டு வருகிறது. முக்கிய தொழில்கள் உள்ள சாலை தெருவில் மக்கள் நெருக்கம் அதிகமாகவும் நடமாடும் பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து மேன்ேஹால் வழியாக வெளியேறி சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. துர்நாற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் ஓடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ---------