/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவு நீரால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
/
கழிவு நீரால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
ADDED : ஜூலை 12, 2025 04:54 AM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளிவரும் கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்கரை கிராமமான தேவிபட்டினம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் நாட்டுப் படகு மற்றும் விசை படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இந்நிலையில் தேவிபட்டினம் குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர், செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்டவை நேரடியாக கடலில் கலக்கும் வகையில் பைப்புகள் பதிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய்களில் விடப்படுகிறது.
இதனால் கழிவுகள் நேரடியாக கடல் நீரில் கலக்கிறது. கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் குதிரை, கடல் பசு, கடல் அட்டை உள்ளிட்டவைகள் மாசுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து நேரடியாக கடலில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.