/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமான ராமநாதபுரம் ஊருணிகளில் நீர் இருப்பு

ADDED : மார் 02, 2024 04:25 AM

ராமநாதபுரம : ராமநாதபுரத்தில் பருவ மழை ஜன., வரை பெய்துள்ளதால் 2023 பிப்.,ல் வறண்டு காணப்பட்ட ஊருணிகளில் தண்ணீர் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை.
ராமநாதபுரம் நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக சிதம்பரம் ஊருணி, நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி, திரவுபதியம்மன் ஊருணி, வண்ணான்குண்டு ஊருணி, செம்மங்குண்டு ஊருணி, கிடாவெட்டி ஊருணிகள் உள்ளன.
இதில் சில ஊருணிகள் பராமரிக்கப்படாமல் புதர்மண்டி முட்செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த 2023ல் மழை குறைவால் பெரும்பாலான ஊருணிகள் பிப்.,ல் வறண்ட நிலையில் காணப்பட்டது. நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
ஆனால் இவ்வாண்டு அதிக மழையால் தற்போது வரை கிடாவெட்டி, செம்மங்குண்டு, நீலகண்டி, சிதம்பரம் ஊருணி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட ஊருணிகளில் தண்ணீர் உள்ளதால் இவ்வாண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு இல்லை என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.