/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமப்புற வீடுகளில் அத்தியாவசிய பொருளான தண்ணீர் தள்ளு வண்டி
/
கிராமப்புற வீடுகளில் அத்தியாவசிய பொருளான தண்ணீர் தள்ளு வண்டி
கிராமப்புற வீடுகளில் அத்தியாவசிய பொருளான தண்ணீர் தள்ளு வண்டி
கிராமப்புற வீடுகளில் அத்தியாவசிய பொருளான தண்ணீர் தள்ளு வண்டி
ADDED : நவ 16, 2025 11:18 PM

சாயல்குடி: மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பற்றாக்குறையால் சாயல்குடி, கடலாடி, சிக்கல், கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் எடுத்துவர ஐந்து குடம் தள்ளு வண்டி அவசியமாகியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழாய்களில் இருந்து வரக்கூடிய நீரை சேகரித்து முன்பு பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் குடங்களை சுமந்து பல கி.மீ., தொலைவு நடந்து வீட்டிற்கு குடிநீர் கொண்டு வருவார்கள்.
தற்போது ஒரே நேரத்தில் 5 குடங்களுடன் தண்ணீரை எடுத்து செல்வதற்கு பயனுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் வண்டி பயன்படுகிறது.
கிராமங்களில் திருமணம், காதணி விழா, பொங்கல் சீர்வரிசை மற்றும் பல்வேறு விசேஷ நிகழ்வுகளில் தள்ளுவண்டி வாங்குவதற்கும் ஒரு தொகையை ஒதுக்கி அவற்றை வழங்கி வருகின்றனர்.
தள்ளுவண்டி மூலமாக வயல்வெளிகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு விதைநெல், உரமுடையிளையும், களைக்கொல்லி மருந்தையும் சுமந்து செல்ல பயன்படுகிறது. அதேபோல் நெற்கதிர்கள், தீவனப் பயிர்கள், விறகுகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக உள்ளது.
ரூ.3000க்கு விற்ற தள்ளுவண்டி தற்பொழுது ரூ.4800 வரை விற்கிறது.
கிராமப்புற வீடுகளில் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக தண்ணீர் தள்ளுவண்டி ஒன்றிணைந்து விட்டது.

