/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
/
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
ADDED : நவ 16, 2025 11:17 PM
முதுகுளத்துார்: கலெக்டர் தலைமையில் இருமாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என மாற்றத்திறனாளிகள் வலியுறுத்தினர்.
முதுகுளத்துாரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் வில்சன் முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் ஆரோக்கிய பிரபாகர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் அரிஹரசுதன் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக ராஜேஷ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் அரிஹரசுதன், துணைத் தலைவர்கள், மாவட்ட குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டடனர்.
ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
கலெக்டர் தலைமையில் இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை சிறப்பு குறைதீர் கூட்டமும், மாதந் தோறும் டி.ஆர்.ஓ., தலைமையில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டமும் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

