/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாயில் காலியாகும் தண்ணீர்: விவசாயிகள் பாதிப்பு
/
பெரிய கண்மாயில் காலியாகும் தண்ணீர்: விவசாயிகள் பாதிப்பு
பெரிய கண்மாயில் காலியாகும் தண்ணீர்: விவசாயிகள் பாதிப்பு
பெரிய கண்மாயில் காலியாகும் தண்ணீர்: விவசாயிகள் பாதிப்பு
ADDED : நவ 16, 2025 10:58 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் வறட்சியால் வேகமாக காலியாகி வருவதால் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் மழைக்காலங்களில் தேக்கப்படும் முழு கொள்ளளவான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12,142 ஏக்கரில் விவசாய நிலங்கள் 20 மடைகள் மூலம் பாசனம் பெறுகின்றன. கண்மாயில் கடந்த மாதம் பெய்த மழையில் 2 அடி தண்ணீர் தேங்கியது.
அதன் பின் தொடர் வறட்சியால் நெற்பயிர்கள் பாதிப்படைந்ததால் பாசன மடைகள் திறக்கப்பட்டு நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீர் விரைவாக காலியாகி தற்போது ஒரு அடிக்கும் குறைவாக உள்ளது.
இதுவும் ஒரு வாரம் மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.
தொடர்ந்து பருவமழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை மகசூல் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதால் பருவ மழையை எதிர்பார்த்து பெரிய கண்மாய் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

