ADDED : ஜூலை 16, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அழகமடை, செங்கமடை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு அமைக்கப்பட்டுஉள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நான்கு நாட்களாக செங்கமடையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
இதனால் தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். குழாய் உடைப்பை சரி செய்ய மக்கள் வலியுறுத்தினர்.