/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
16 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் குழாய் புதுப்பிப்பு
/
16 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் குழாய் புதுப்பிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:57 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் குழாய் 16 ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பஸ்கள் வந்து செல்வதற்கான வசதி, புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கவுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் பின்புறம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்கவுள்ளதால், அதில் உள்ள குழாயை மாற்றியமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி நடந்து வருவதால் குடிநீர், கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. அண்ணா சிலை அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் திட்டத்திற்காக குழாய் பதித்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
தற்போது குடிநீர் குழாய் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இக்குழாய் 120 மி.மீ., விட்டம் கொண்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தடையின்றி விநியோகிக்க முடியும் என்றார்.