/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலமுந்தலில் குடிநீர் தட்டுப்பாடு; விலைக்கு வாங்கி சிரமப்படும் மக்கள்
/
மேலமுந்தலில் குடிநீர் தட்டுப்பாடு; விலைக்கு வாங்கி சிரமப்படும் மக்கள்
மேலமுந்தலில் குடிநீர் தட்டுப்பாடு; விலைக்கு வாங்கி சிரமப்படும் மக்கள்
மேலமுந்தலில் குடிநீர் தட்டுப்பாடு; விலைக்கு வாங்கி சிரமப்படும் மக்கள்
ADDED : ஆக 27, 2025 12:29 AM
சாயல்குடி; சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமுந்தலில் 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மாரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமுந்தலில் காவிரி குடிநீர் மற்றும் உள்ளூர் கிணறுகளில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலமுந்தல் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் அதிகளவு மீனவர்களும், கூலித்தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். காவிரி நீர் கை கொடுக்காவிட்டாலும் உள்ளூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய கிணறுகளில் இருந்து பைப் லைனில் தண்ணீர் சப்ளை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.
ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழாய்களுக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி குடம் ரூ. 12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் எங்களின் கோரிக்கையை ஏற்று முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீருக்காக வருமானத்தின் பெரும் பகுதி செலவிட வேண்டி உள்ளது என வேதனை தெரிவித்தனர்.