UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி பேருராட்சி 10வது வார்டு அண்ணாநகரில் பிளாக் சாலை ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய் பதிப்பதற்காக 8 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட ரோட்டை முழுமையாக சீரமைக்காததால் மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தற்போது கழிவு நீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே திட்டப் பணிகளை செய்து வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்கள் உடனடியாக ஒப்பந்ததாரரை கொண்டு குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
