/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.206 கோடியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
/
ரூ.206 கோடியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ரூ.206 கோடியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ரூ.206 கோடியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ADDED : ஆக 14, 2025 11:27 PM
கீழக்கரை: கீழக்கரையில் ரூ.206 கோடியில் பத்தாயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
நகர்ப்புறங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்கான அடல் மிஷன் அம்ருத் 2.0 திட்டம் மத்திய அரசால் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 500 அம்ருத் நகரங்களில் குடிநீர் வழங்குவது, நீர்நிலைகள், பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவது, நீர்வள மேலாண்மையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்றவை திட்டத்தின் அம்சங்களாகும்.
கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 13 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் தனியார் டேங்கர் லாரி மூலமாக குடிநீரை விலைக்கு வாங்கிய பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 700 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.206 கோடியில் 27 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட 3 பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் கீழக்கரை வடக்கு தெரு, புது கிழக்கு தெரு மற்றும் மாலாக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் கீழக்கரை நகர் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க வழிவகை செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கீழக்கரை தெருக்களில் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழாய்கள் தோண்டப்பட்டு அவற்றில் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. சம்பந்தப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைத்து கொடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.