/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கரக்கோட்டையில் குழாய் சேதமடைந்து வீணாகிய குடிநீர்
/
சக்கரக்கோட்டையில் குழாய் சேதமடைந்து வீணாகிய குடிநீர்
சக்கரக்கோட்டையில் குழாய் சேதமடைந்து வீணாகிய குடிநீர்
சக்கரக்கோட்டையில் குழாய் சேதமடைந்து வீணாகிய குடிநீர்
ADDED : ஏப் 22, 2025 05:43 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி வ.உ.சி., தெருவில் ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீணாகியுள்ளது.
சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இக்குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் அடிக்கடி சேதமடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது.
தற்போது வ.உ.சி., 7 வது தெருவில் குழாய் உடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வீணாகி தாழ்வான இடத்தில் தேங்கியுள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளதால் நோய் தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.