/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் ரோட்டோரம் ஆபத்தான காய்ந்த புளியமரம் அச்சத்தில் நெசவாளர்கள்

ADDED : ஜன 12, 2025 05:10 AM

பரமக்குடி :   பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம், நயினார்கோவில் ரோட்டோரம் புளிய மரம் காய்ந்த நிலையில் ஆபத்தான சூழலில் அப்பகுதியினர் உள்ளனர்.
எமனேஸ்வரம் நேருஜி மைதானம் வழியாக நயினார்கோவில் ரோடு செல்கிறது. இந்த ரோடு குறுகிய பகுதியாக உள்ள நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் எமனேஸ்வரம் வண்டியூர் பகுதி போலீஸ் ஸ்டேஷன் அருகில் பட்டுப்போன புளியமரம் உள்ளது. இங்கு ஏராளமான நெசவாளர் குடியிருப்புகள் உள்ளன.
தொடர்ந்து ஒவ்வொருவரும் வீட்டில் தறி மேடை அமைத்து தொழில் செய்கின்றனர். இப்பகுதியில் ஓராண்டாக பட்டுப்போன புளியமரத்தின் காய்ந்த கிளைகள் உடைந்து விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
மேலும் அருகில் தெருக்களில் நுால் சிக்கு எடுக்க நீட்டும் போது அவற்றின்மேல் விழுந்து நுால் அறுபடுகிறது. இத்துடன் வீடுகளின் ஓடுகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும்நிலை இருக்கிறது.
ஆகவே மக்களின் அச்சத்தை தீர்க்கும் வகையில் மரத்தை அகற்ற நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.