/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அமைச்சரிடம் நெசவாளர்கள் மனு
/
மத்திய அமைச்சரிடம் நெசவாளர்கள் மனு
ADDED : மார் 05, 2024 04:19 AM
பரமக்குடி : பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்க பெடரேஷன் சார்பில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பிப்.27ல் டில்லியில் பாரத் டெக்ஸ்டைல் 2024 உலக அளவிலான கண்காட்சி நடந்தது. இதில் பரமக்குடி அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் சார்பில், செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன், பொருளாளர் கணேஷ்பாபு பங்கேற்றனர்.
அப்போது கைத்தறி துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் இடம் மனு அளித்தனர். அதில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களின் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் விற்பனை தொகை கொள்முதல் பெறுபவர்களிடமிருந்து 6 மாத காலத்திற்கு பிறகு தான் பணம் வழங்கப்படுகிறது. 45 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., பைல் செய்ய மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை ஓர் ஆண்டாக வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் கதர் ஆடை போன்றே கைத்தறிக்கும் ஜி.எஸ்.டி., ல் இருந்து முழு விலக்க அளிக்க வேண்டும். கைத்தறி துறைக்கு தனியாக மத்திய கைத்தறி துறை அமைச்சகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

