/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபம்: கருணாஸ் வரவேற்பு
/
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபம்: கருணாஸ் வரவேற்பு
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபம்: கருணாஸ் வரவேற்பு
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபம்: கருணாஸ் வரவேற்பு
ADDED : அக் 31, 2025 12:20 AM

கமுதி:  பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற முதல்வர் அறிவிப்பை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வரவேற்றுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு அன்னதான கூடத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை கருணாஸ் வரவேற்றார். பின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கருணாஸ் கூறியதாவது:
தேசியமும் தெய்வீகமும் என வாழ்ந்த தேவர் நினைவிடத்தில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அ.தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம்,செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து வருவதாக கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தி.மு.க.,வில் இருந்தாலும் ஜெ., முதல்வராக இருந்த போது அ.தி.மு.க.,வில் நானும் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். அ.தி.மு.க., மீண்டும் மலர வேண்டும். பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டு வைத்து அ.தி.மு.க., வை அழித்து வருகிறார். பா.ஜ.,வினர் வட மாநிலத்தவர்களின் ஓட்டுகளை இங்கு கொண்டு வந்து நம்மை ஏமாற்றப் பார்க்கின்றனர். தமிழக மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார். உடன் மாநில செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

