/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியரசு தினழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வரவேற்பு
/
குடியரசு தினழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வரவேற்பு
குடியரசு தினழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வரவேற்பு
குடியரசு தினழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜன 30, 2025 10:33 PM
ராமநாதபுரம்; புதுடில்லியில் நடந்த குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்று ஊர் திரும்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடில்லியில் ஜன.26ல் குடியரசு தினவிழாவில் மத்திய கலைபண்பாட்டுத்துறையின் சங்கீத் நாடக அகாடமி சார்பில் 60 கரகாட்ட கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்கள் ஜெயஸ்ரீ, ஹரிராகுல், ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் இந்தியாகேட் வாயிலில் அனைத்து மாநில நாட்டுப்புற கலைஞர்கள் 5000 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கரகாட்டம் ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
ரயிலில் நேற்று ராமநாதபுரம் வந்த மூவரையும் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்கள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆடி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பயிற்சியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மக்கள் பங்கேற்றனர்.